தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 28, 2015

மதுவை காதலிக்கும் கணவன்கள்: எவ்வாறு திருத்துவது?

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் பெண்கள், தங்களுக்கு நன்கு படித்த மாப்பிள்ளை, பணக்கார மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட மதுவுக்கு அடிமையாகாத மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எதிர்கால வாழ்க்கைக்கு நன்மை பயக்கும்.
ஏனெனில், மதுவுக்கு அடிமையான மாப்பிள்ளையாக இருந்தால், மது பாட்டில் வாசல் வழியாக வந்தால், பணமும் படிப்பும் ஜன்னல் வழியாக ஓடிவிடும்.
ஆனால், சில ஆண்மகன்கள் திருமண பந்தத்தில் இணைந்த பிறகு மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள், அதற்கு குடும்ப பிரச்சனையே நிச்சயம் காரணமாக இருக்கும்.
இதனால், தங்களை விட்டு விட்டு, மதுமேல் அதிக மோகம் கொண்டுள்ள கணவன்களை எப்படி திருத்துவது என்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்,
வழிமுறைகள்
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாகவும் மது அருந்துவதுண்டு.
அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம். இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சனைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும்.
பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார். அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் அவர் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள்.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள்.
இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம் என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.
எனவே இதுபோன்ற விழாக்களுக்கு உங்கள் கணவன்கள் செல்வதற்கு அனுமதி வழங்குவதை குறைத்துவிடுங்கள்.
எதுவாயினும், அன்பு என்ற ஒன்றால் இந்த உலகத்தை ஆளலாம் என்பது போல, உங்கள் கணவன்களையும் ஆளலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment