தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2015

எந்த காலப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்கள்?

குழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்குமிடையில் தொடர்பு இருக்கின்றதா? என ஐக்கிய ராச்சியத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 450,000 வரையான மக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் கோடை காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரோக்கியமானது அவர்களது குழந்தைப் பருவத்தினை விடவும், இளமைக் காலத்திலேயே அதிகமாக இருக்கின்றது என இந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் D அவசியம் எனவும், இக்காலப்பகுதியில் விட்டமின் D தொகுப்பு அதிகளவில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அக்காலப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியம் வாய்ந்தவையாக காணப்படுகின்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக