தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

சுத்தத்தால் மற்றவர்களை சுண்டியிழுக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் நமது வீட்டின் அழகை பார்த்து பிரமித்துப்போகின்ற அளவுக்கு அவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சமைலறை, பூஜை அறை, குளியலறை, தூங்கும் அறை, கழிவறை என அனைத்தையும் பளிச்சென்று வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு உங்கள் வீடுகளை பளிச்சென்று வைத்திருக்க சில டிப்ஸ் இதோ,
சமையலறை தொட்டி:
சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டி ரசாயன துடைப்பான்கள் ஒரு தேர்வாக இருந்தாலும் கூட அவை தொட்டி மற்றும் அதன் குழாய்களுக்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
அதனால் அதனை சுத்தப்படுத்துவதற்கு அரை கப் பேக்கிங் சோடாவை தொட்டியில் ஊற்றவும்.
பின் அரை கப் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கழுவவும். சிறிது நேரத்திற்கு அதனை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெந்நீரை ஊற்றி அலசவும்.
நீரின் கறைகள்:
கண்ணாடி டம்ளர்களில் சுடுதண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் அதில் கறைகள் படியும், இதனை சுத்தம் செய்வதற்கு வினிகளை ஒரு துணியில் எடுத்து இந்த கண்ணாடி டம்ளரை நன்றாக துடைத்து காயவைக்க வேண்டும்.
மைக்ரோவேவ்:
மைக்ரோவேவனை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறிய டம்ளரில் தண்ணீர் விட்டு அதனுடன் எலுமிச்சம் பழத்தை துண்டாகி வெட்டி உள்ளே போட்டுவிடுங்கள். பின்னர் மைக்ரோவேவனை ஓன் செய்துவிட்டு சிறிது நேரம் பப்புல்ஸ் வரும் வரை விட்டுவிடுங்கள்.
பின்னர், அந்த எலுமிச்சை நீரின் ஆவி பரவியுள்ள இடங்களை ஒரு துணியால் சுத்தமாக துடைத்து எடுங்கள்.
சலவை இயந்திரம்:
சுடு தண்ணீரால் சலவை இயந்திரத்தை நிரப்பிவிட்டு அதனுடன் 3 அல்லது 4 கப் வெள்ளை வினிகரை சேர்த்து கலக்கவும்.
பின்னர் சிறுமி நிமிடங்கள் கழித்து பாக்கிங் சோடாவை போட்டு ஒரு 30 நிமிடங்கள் இயந்திரத்தை ஓன் செய்துவிடவும்.
பின்னர் பாருங்கள் உங்கள் சலவை இயந்திரம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று.
ஆடைகளில் காபி கறை:
தண்ணீர் மற்றும் பாக்கிங் சோடா ஆகிய இரண்டும் இணைந்து உங்கள் ஆடைகளில் மாயங்களை நிகழ்த்தும்.
சுடுதண்ணீர் மற்றும் பாக்கிங் சோடாவை போட்டு வெறும் 30 நிமிடங்கள் ஊற வைத்தால், கறை போய்விடும்.
தண்ணீர் குழாய்:
தண்ணீர் குழாய்களில் படிந்துள்ள கறைகளை போக்குவதற்கு, ஒரு துண்டு எலுமிச்சம்பழத்தை கொண்டு குழாய்களை நன்றாக தேய்ப்பதால் அதில் படிந்துள்ள கறைகள் போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக