ஒருவர் சிவச்சின்னங்கள் அணிவதற்காக பயப்படுகிறார்
ஒருசிலர் சிவாலயங்களுக்ச் சென்றால் எதுவுமே இல்லாமல் ஓட்டையாண்டியாகிவிடுவோம் என பயப்படுகிறார்
சிவத்திருமேனி வீட்டில் வைத்தால் குடும்பமே ஆடிவிடும் ,,ஒற்றைக்காலில் நிக்கிற சாமி ,,சுடுகாட்டு சாமி இன்பத்தையே தராது பணமே சேராது என பயபபடுகிறார்..!
ஒருவர் சிவனடியாராக ஆக வேண்டுமென்றால் கட்டுப்பாடு சுத்தம் பத்தம் புலால் மது மாது இதையெல்லாம் சமாளிப்பது சாத்தியமா என பயப்படுகிறார்...!
ஒரு சிவனடிாரைப் பார்த்தால் இவர் இப்படித்தானே இருக்க முடியும் ஏன் இப்படியிருக்கிறார் ..?இப்படி இருந்தால் சிவனடியாராக எப்படியிருக்க முடியும் ?சிவத்திற்கே வைத்திற்கே கேடு என பயப்படுகிறார்...!
ஒரு சிலர்தான் இதைத் தாண்டி சிவத்தை வணங்க துணிகிறார்கள் ,,,அவர்களில் பலர் மேற்காட்டப்பட்ட கட்டுப்பாடுகளை கடைபிடித்து எங்கு மீறிவிடுவோமோ என பயந்தே வாழ்கின்றனர்...!
பெருங்கொடுமை சிவம் சோதனைச் செய்யும் அறிவியல் ஆசிரியராகவே பார்க்கப்படுகிறார்...!
இப்படி நம்பகத்தன்மையில்லாத ஒரு வழிபாட்டு முறை ஏன் வந்தது?
சிவாலயங்களுக்கோ வீட்டிலிருந்த படியோ தென்னாடுடைய சிவனேப் போற்றி எந்நாட்டவருக்கும் இறைவாப் போற்றி என கூட்டத்தோடு கோசம் போட்டுவிட்டு அப்பா இறைவா (பிரதோசமோ சிவராத்திரியோ)இப்படி ஒரு நல்ல நாளில் உன்னை வணங்குகிறேன் என்னை எப்படியாவது காப்பாற்று பெருந்துன்பத்திலிருக்கிறேன் என ஒரு நிபந்தனை...!
மறுநாள் ஆத்தா தாயி என்ன பெத்தவளே உன் பிள்ளைய நீதாமா காப்பாத்தனும் தீரா துன்பத்துல இருக்கிறேன் என ஒரு நிபந்தனை...!
அன்று மாலையே அப்பனே பிள்ளையாரப்பா சங்கட சதூர்த்தி திருநாள்ள உன்னப் பார்க்க வந்துருக்கன் நீதான் பா என் சங்கடத்த தீர்க்கனும் என ஒரு நிபந்தனை..!
மறுநான் முருகா முருகா முருகா அப்பனுக்கு உரைத்த அப்பனே ஆறமுகனே உனக்கு காவடிதூக்குறன் நீதான்பா காப்பாத்தனும்..!♪♪♪♪
கார்திகை மாதம் வந்துவிட்டது சாமியே சரணம் ஐயப்பா ஒரு மண்டலம் நீதான்பா முழுமுதற்கடவுள் ....இந்த வருசம் பூரா நீதான் காப்பாத்தனும் என நிபந்தனை
அப்பா மலைக்குப்போய்வந்து இரண்டுமாதம் ஆயிட்டு திருப்பதிபொய் மொட்டபோட்டு லட்டு திண்டு வந்தா திருப்பம் வரும்னாங்க குடம்பத்தோட போய்டு வருவோம்...திருப்பம் வரும்...
இப்படி அடுக்கிக்கேட்டே போனா எப்ப எந்த சாமி உனக்கு அருள்புரியுது ...அந்த அருளை வைத்து எப்பதான் உன் வாழ்க்கை திருப்தியடைந்தது?இதுல என்னத்தக் கண்டீங்க....?இதுதான் வழிபாட்டு முறையா ..?இதுலவேற எங்க குடும்பமே பயங்கர பக்தியான குடும்பம் ...?எனப் பீற்றல் வேறு...?
இப்படிப்பட்ட வழிபாடுமுறையால நாட்டில் பெருசா என்ன கிழிச்சீங்க..!
மக்கள் மனமெல்லாம் சந்தோசமா அமைதியா இருக்கா?ஏன் உங்க வீட்ல அமைதியிருக்கா ?ஏன் இல்லை என்றால் உங்கள் வழிபாட்டு முறையிலும் அமைதியும் தெளிவும் நம்பத்தன்மையும் இல்லாததே காரணம்...!
மக்கள் மனமெல்லாம் சந்தோசமா அமைதியா இருக்கா?ஏன் உங்க வீட்ல அமைதியிருக்கா ?ஏன் இல்லை என்றால் உங்கள் வழிபாட்டு முறையிலும் அமைதியும் தெளிவும் நம்பத்தன்மையும் இல்லாததே காரணம்...!
தெய்வம் என்று நீங்கள் எந்த ஒன்றை உண்மையாக மெய்யாக நம்புகிறீர்களோ அந்த தெய்வம் எந்தப்பெயரில் எந்த உருவத்தில் இருந்தாலும் அதுதான் சிவம்
இதைத்தான் யாதொரு தெய்வமாகினும் மாதொருபாகத்தனாய் அருள்வதாகப் பொருள்..
தவிர பார்ப்தையெல்லாம் நம்புகிறோம் என்ற மாயையில் எதிலும் நம்பகத்தன்மையில்லாது பக்தியல்ல
தவிர பார்ப்தையெல்லாம் நம்புகிறோம் என்ற மாயையில் எதிலும் நம்பகத்தன்மையில்லாது பக்தியல்ல
சிவபெருமான் அன்பே வடிவானவர் ,,கருணையே உருவானவர் என்பது அவரை முழுமுதற் கடவுளாக உணர்ந்தவரால் மட்டுமே உணர முடியும்..!
அவர் கேட்பதை கொடக்கிற சாமியா என கேட்காதீங்க ...!உனக்கு உகந்தது என்றால் நீ கேட்காவிடுனும் கொடுக்கும் தயாபரன் சிவம்..!
இது உண்மையா என கேட்க்காதீங்க ஒருமுறை முழுதா நம்பினோர்கு தன்னை முழுசா காண்பிக்கும் கூத்தப் பெருமான் சிவம்..!
தன் பிரச்சனை தீர்ப்பாரா என கேட்காதீங்க ...பிரச்சனைக்கு பரிகாரம் சொல்லாமல் தீர்வுதரும் நீதிமான் சிவம்
இன்பம் தருவாரா என கேட்காகாதிங்க இன்பத்தின் வழியே உள்ளே நுழையும் தென்றல் சிவம்
நம்பலாமா என்று கேட்க்காதீங்க உண்மையாக நம்பிக் கெட்டவரில்லா சாதனையாளன் சிவம்
ஒருமுறை உண்மையா நம்பி ஒருநிமிடம் கண்ணை மூடுங்க கூத்தப்பெருமான் ஆடுவார் உங்கள் வாழ்வில் இனி உங்களுக்காக என்ற மெய்ப் புலப்படும்
நற்றுணையாவது நமச்சிவாயவே —
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக