உடலின் வெளிப்புற சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது.
உடலின் உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும்.
பெண்களின் உடலில் நறுமணம் வீச
கடுக்காய்த் தோல், லோத்திரப் பட்டை, வேப்பம் பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, மாதுளம்பட்டை இவற்றை மிகவும் நுண்ணிய தூளாக்கிக் கொள்ளவும்.
இந்தத் தூளுடன் சந்தனத் தூள் மற்றும் முக பவுடர் கலந்து வைத்துக் கொண்டு பூசிவர பெண்களுக்கு ஏற்படும் உடல் நாற்றம் மறைந்து உடல் கமகமக்கும்.
ஆணின் உடலில் நறுமணம் வீச
கடுக்காய்த் தோல், சந்தனத் தூள், கோரைக் கிழங்கு, சிறுநாகப்பூ, விளாமிச்சைவேர், வெள்ளை லோத்திரப்பட்டை, ஃபேஸ் பவுடருடன் கலந்து உடலில் பூசிக் கொள்ள ஆண்களுக்கு வியர்வையால் ஏற்படும் கெட்ட மணம் விலகும்.
அக்குள் நாற்றம் மறைய
அக்குள் நாற்றம் மறைய கடுக்காய், வில்வம்பழச்சதை, கோரைக்கிழங்கு, இவற்றைத் தூளாக்கி தண்ணீரில் குழைத்து அக்குள் பகுதியில் பூசிய பின் குளிக்க அங்குள்ள கெட்ட மணம் மறையும்.
ஆயுர்வேத மருந்துகளில் ஏலாதி சூரணம் பாசிப்பயறுடன் கலந்து தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக