தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 11, 2015

உணவில் எதற்காக பிரியாணி இலை சேர்க்கிறோம்?

உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஏறும் போது வாய் அல்சர் ஏற்படும்.
அதனால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கசகசாவை பயன்படுத்தினால் அதற்கு நிவாரணம் கிடைக்கும். கசகசாவில் செய்யப்பட்ட சாக்லெட், துருவப்பட்ட தேங்காய் மற்றும் சர்க்கரையை கொண்டு வாய் அல்சருக்கு வலியில்லாத நிவாரணத்தை பெறலாம்.
இஞ்சிப்பொடி
இஞ்சி பொடியை வீங்கிய ஈறுகளின் மீது தடவினால் ஈறுகளில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதில் அழற்சி எதிர்ப்பி பொருட்கள் அடங்கியுள்ளதால், ஈறு வலியை போக்கி நிவாரணத்தை அளிக்கும்.
பிரியாணி இலை எதற்காக?
பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது.
பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

No comments:

Post a Comment