Firewall என்பது ஒரு நமது கணனிக்கும், இணையத்துக்கும் இடையே அரணாக உள்ள பகுதியாகும்.
அதாவது நமது கணனியை தாக்கவரும் ஒரு Programme-யினை தடுக்கும் ஒரு Hardware அல்லது Software Programme ஆகும்.
பயர்வாலின் பணி
பயர்வால், நம் கணனியில் நுழைந்து, தனி நபர் தகவல்களைத் திருடும் ஹேக்கர்களிடமிருந்து நம் கணனியை பாதுகாக்கிறது.
அதுமட்டுமின்றி இப்போது கணனிகளில் பயன்படுத்தும் அனைத்து Operating System-ங்களிலும் பயர்வால் ஒன்றைக் கொண்டுள்ளன.
Windows Operating System - ங்களிலும் மைக்ரோசொப்ட் நிறுவனம் பயர்வால் ஒன்றைத் தந்து, அதனை அவ்வப்போது தானாகவே Update செய்து வருகிறது.
ஆனாலும் விண்டோஸ் இயங்கும் கணனிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
ஏனென்றால், உலகெங்கும் விண்டோஸ் இயங்கும் கணனிகள் தான் ஹேக்கர்களின் இலக்குகளாக உள்ளன. 90% க்கும் மேலான கணனிகளில், Windows இயங்குவதே காரணம்.
நமக்குத் தெரியாமல், நாம் உணராமல், நம் கணனி இயங்குகையில், உள்ளே நுழைந்திடும் ஹேக்கர்களின் முயற்சியை முறியடிப்பதும், தடுப்பதுமே பயர்வால் ஒன்றின் செயல்பாடு.
இது கணனி உள்ளேயே இருந்து கொண்டு இந்த பணியில் ஈடுபடுவதால், இதனை உள்நிலைப் பாதுகாப்பு (inbound protection) என அழைக்கின்றனர்.
அத்துடன், , Worms, Virus மற்றும் Spam என அழைக்கப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை மற்ற கணனிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.
இலவச Firewall தொகுப்புகளை எந்த எந்த தளத்திலிருந்து பெறலாம்?
ஸோன் அலார்ம் (ZoneAlarm) என்னும் பயர்வால் தொகுப்பினை Zone Labs என்னும் நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்குகிறது.
இது தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசம். இந்த தளத்தில் சரியாகச் சென்று இலவச பதிப்பினைக் கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்.
Zone Alarm Security Suite மற்றும் Zone Alarm Pro என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கும் பயர்வால்களும் இங்கு கிடைக்கும்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 23 அக்டோபர், 2015
கணணியின் பாதுகாப்பு அரண் “Firewall”
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக