தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 அக்டோபர், 2015

காளானில் மின்கலம் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

Portabellas எனும் காளானை அடிப்படையாகக் கொண்டு புதிய வகை லிதியம் அயன் மின்கலத்தினை உருவாக்கி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவ் வகை மின்கலமானது இலகுவாக உருவாக்கப்படக்கூடியதாக இருப்பதுடன், செலவும் குறைவாக இருப்பதாக குறித்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் கைப்பேசிகளில் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதற்கு இம் மின்கலத்தினைப் பயன்படுத்தக்கூடிதாக இருக்கும் எனவும், குறுகிய காலத்தில் இம் மின்கலங்களுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டளவில் 6 மில்லியன் வரையான வாகனங்களில் இம்மின்கலங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக