தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

இரத்த அழுத்தத்தை குறைக்கும் சொக்லேட் தயாரிப்பு!

அமெரிக்காவில் சத்து நிறைந்து அத்துடன் மருந்தாக பயன்படக்கூடிய சொக்லேட்டினை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் சொக்லேட்டில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.
கொக்கோ என்னும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் சொக்லெட்டில் தியோபுரோமைன் உள்ளது.
இவை கர்ப்பிணிகளின் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
இந்நிலையில் போஸ்டனை சேர்ந்த குகா ஸோகோ எனும் நிறுவனம், கயோயா எனப்படும் இனிப்பற்ற மூலப்பொருளை கொண்டு சொக்லேட்டினை தயாரித்துள்ளது.
இந்த கயோயா மூலப்பொருளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் தாதுக்கள் உள்ளன, சொக்லேட்டில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து 35 சதவீதம் மட்டுமே உள்ளது.
இந்த சொக்லேட் பக்க வாதம் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குறைக்கும் தன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக