காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம்.
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.
எந்த நேரத்தில் வெந்நீர் குடிக்கலாம்?
அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது ஆக்சிஜன்.
அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால் செரிமானத்தைத் தூண்டும்.
மருத்துவ பயன்கள்
தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன.
அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான்.
இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீர் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.
இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது.
இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.
வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும்.
போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.
இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில்(Toncil) அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்.
நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக