தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 அக்டோபர், 2015

உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்

உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுஉப்புகள் என அனைத்தும் அவசியமான ஒன்று.
ஒவ்வொரு சத்தும் ஒவ்வொரு உடல்பாகத்திற்கு வலு சேர்க்கின்றன.
குறிப்பாக கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், கீரையில் உள்ள வைட்டமின்கள் கண் சம்மந்தமான நோய்களையும் குணமாக்குகின்றன.
மூளை- வால் நட்ஸ் மற்றும் மீன் போன்ற உணவுகள் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள ஒமேகா-3 அமிலம் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
தசைகள்- வாழைப்பழம், முட்டை மற்றும் மீன் உணவுகள் தசைகளை வலுவடையச் செய்கின்றன. மேலும் பால் பொருட்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு சிறந்த உணவாகும்.
நுரையீரல்- பச்சை காய்கறிகளில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள் நுரையீரலுக்கு அவசியமானது, எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
கண்கள்- மீன், முட்டை, கீரை உணவுகள் கண்களுக்கு வலு சேர்க்கின்றன.
இதயம்- ஓட்ஸ், சிட்ரஸ் மற்றும் டார்க் சொக்லேட் போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக