தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 4, 2015

அளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்!

கடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
நன்கு காரசாரமாக குழம்பு வைத்தோ, பொரியல் என விதவிதமாக சமைத்து சுவைப்பார்கள்.
மீன்களை அவித்தோ குழம்பு வைத்தோ சாப்பிட்டால் இதயநோயின் பாதிப்பு குறையும்.
ஆனால், மீன்களை பொரித்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கும் முழுமையாக கிடைப்பதில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரித்த மீன்
மீன்களை பொரித்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன், அத்தகைய உணவு தயாரிப்பு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொரித்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு, 48 சதவீதம் கூடுதல் ஆகிறது என அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாத்திரம் கழுவுங்கள்
நாம் சமைத்த உணவுகளை சாப்பிட்டு முடித்த பின்னர், அதனை சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை பார்க்கும்போது எரிச்சல் வரும்.
ஆனால், முழு மனதுடன், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கழுவினால் மனசு லேசாகும், மனஅழுத்தம் குறையும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment