தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 அக்டோபர், 2015

தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சியை ஏற்படுத்த அறிமுகமாகும் கமெரா

பொதுவாக கமெராக்களில் படம்பிடிப்பதற்காக ஒரு வில்லை (Lens) மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆனால் வரலாற்றில் முதன் முறையாக 16 வில்லைகளைக் கொண்ட கமெரா ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த வெளிச்சம் உள்ள போதிலும் துல்லியமாக புகைப்படம் எடுக்கக்கூடிய இக் கமெராவானது 52 மெகாபிக்சல்களை உடைய புகைப்படங்களை உருவாக்கவல்லது.
இதன் விலையானது 1,699 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Canon நிறுவனம் கடந்த மாதம் 120 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில் இப்புதிய கமெரா தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இவற்றுக்கிடையில் விற்பனையில் பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக