சனி கிரகத்தை சுற்றி வரும் நிலாவில் கடல் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, சனி கிரகத்தை ஆய்வு செய்ய கேசினி என்ற விண்கலத்தை அனுப்பியிருந்தது.
தனது பயணத்தில் சனியை சுற்றி வரும் நிலாக்களில் ஒன்றான என்சிலடுஸை படம் எடுத்து அனுப்பியுள்ளது.
அந்த படத்தில் காணப்பட்ட வரிகளும், பள்ளங்களும், பூமியை சுற்றி வரும் நிலாவில் இருப்பதை போன்று உள்ளது.
மேலும் அந்த படத்தை உற்றுநோக்கியதில் ஏற்கனவே கடல் இருந்தது தெரியவந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கார்னெல் பல்கலைகழத்தில் உள்ள கேசினி திட்டத்தில் பணியாற்றும் பால் ஹெல்பென்ஸ்டீய்ன் கூறுகையில், கடல் இருப்பதால் ஏற்கனவே அங்கு உயிர்கள் வாழ்ந்திருக்கலாம், எனினும் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடியாது.
அடுத்த இரண்டு வாரங்களில் கேசினி விண்கலம், என்சிலடுசுக்கு அருகே செல்லும் போது இன்னும் அதிகளவான படங்களை அனுப்பிவைக்கும்.
இதிலிருந்து மேலும் பல ஆச்சரியங்கள் வெளிப்படலாம் என தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக