அதிகளவில் இணையம் உபயோகிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் உடல் உடை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு சராசரியாக 25 மணி நேரம் இணையத்தை பயன்படுத்தும் 134 பேரில் 26 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அதேபோல் அவர்களில் 46 சதவீதம் பேர் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் அமைந்துள்ள ஹென்றி போர்டு மருத்துவமனையின் முன்னணி மருத்துவர்கள் 14 முதல் 17 வயதுடைய 335 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், எவ்வளவு அதிகமாக இணையத்தை பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக ரத்த அழுத்தமும் உடல் எடையும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக