தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2015

வாழைப் பழத்தோல் ஆரோக்கியமா? ஆரஞ்சு பழத்தோல் ஆரோக்கியமா?

பழங்களில் உள்ள சத்துக்களை போன்று பழத்தோல்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
தற்போது வாழைப் பழத்தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தோலின் நன்மைகள் பற்றி பார்ப்போம்,
வாழைப் பழத்தோல்
வாழைப் பழத்தோலில் அதிகளவில் விட்டமின் பி6, பி12 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்றவை இருக்கின்றன.
வாழைப் பழத்தோலில் இருக்கும் விட்டமின் ஏ பற்கள், எலும்பு மற்றும் திசுக்களின் வலுவை அதிகரிக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இதன் தோலில் இருக்கும் விட்டமின் பி6 உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கிறது.
இது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்துக் கொள்ள வாழைப் பழத்தோல் உதவுகிறது.
வாழைப் பழத்தோலில் இருக்கும் விட்டமின் பி12 நரம்பு மண்டலத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. மற்றும் இதன் விட்டமின் பி 2 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
வாழைப்பழத்தோல் கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க பயனளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழத்தோல்
ஆரஞ்சு பழத்தோல் உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும்.
எனவே உணவில் ஆரஞ்சு பழத்தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம்.
ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம்.
100 கிராம் ஆரஞ்சுப் பழத்தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன.
எனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.
ஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.
மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக