தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 அக்டோபர், 2015

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்!

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிவது என்பது, அந்த வளையல் எழுப்பும் ஓசையில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதன் காரணமே.
அதுபோன்று கர்ப்பிணி தாய்மார்களும் வயிற்றில் இருக்கும் தங்கள் குழந்தைகளோடு அன்பாக பேசலாம்.
1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அவர்களை கூப்பிடுங்கள்.
2. குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும்.
மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.
4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் நேர்மறையாகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் நேர்மறையாவே யோசிக்கும்.
மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
5. குழந்தை உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக