கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் மன ஆரோக்கியத்திற்கும், குடலில் வளரும் பக்டீரியா வகை ஒன்றிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில் தற்போது புரோபயாடிக் எனும் பக்டீரியா ஆனது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், நினைவாற்றலையும் அதிகரிப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது 22 ஆண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு பில்லியன் வரையான Bifidobacterium longum 1714 வகை பக்டீரியாக்களை கொண்டுள்ள மாத்திரைகள் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் வழங்கப்பட்டுவந்துள்ளது.
ஒரு மாத கால முடிவில் ஆய்வாளர்கள் மேற்கண்ட முடிவைப் பெற்றிருந்தனர்.
இதற்கு குருதியில் காணப்படும் மன அழுத்தத்திற்கு காரணமான கோட்டிசோல் ஹோர்மோனின் மட்டம் பக்டீரியாவின் செயற்பாட்டினால் குறைக்கப்படுதலே காரணம் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக