வெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மோரில் உள்ள சத்துக்கள்:
மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.
வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சிஅடைவதைத் தடுக்கலாம்.
மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல்மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
சருமத்திற்கு உகந்த மோர்:
1. சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மோர் சிறந்த மருந்தாகஉள்ளது. முகத்தில் தயிர், பால் ஏடு தேய்த்து வந்தால் நல்ல பலன் தெரியும்.
2. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மோரில் நனைத்த துணியால் கட்டுப் போட்டு வருவதன் மூலம் சரும பாதிப்புவிரைவில் குணமடைவதைக் காணலாம்.
3. தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர்சாதமும் கூடாது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக