Nightmare disorder என்பது (அச்சுறுத்தும் கனவுகள்) மருத்துவர்களால் பொதுவாக Parasomnia என குறிப்பிடப்படும்.
இந்த தூக்க வியாதி என்பது, நாம் தூங்கும் போது வரும் கனவுகள் அனைத்தும் நம்மை அச்சுறுத்துவதாகவே இருக்கும்.
இது பொதுவாக REM எனப்படும் rapid eye movement நடைபெறும் நேரத்தில் நடப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக நமது தூக்கமானது 4-ல் இருந்து 6 நிலைகளாக நடைபெறுகிறது என மனோவியல் ஆய்வாளர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
இந்த ஒவ்வொரு நிலையும் 90 நிமிடங்கள் கொண்டதாகவும், இந்த நிலைகளில் ஒவ்வொன்றிலும் நமது கனவு வரும் நேரமானது அதிகரித்துக்கொண்டே வரும் எனவும் மனோவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் நாம் ஆழ்ந்த தூக்கத்தினிடையே திடுக்கிட்டு விழிக்கும் அந்த நிலையானது நமது தூக்கத்தின் மூன்றாவது கட்டத்தின் இரண்டாவது பாதியில் நிகழ்வதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள்
நமது கனவுகள் தெளிவானதாகவும் உண்மையானது போன்றும் இருக்கும், கனவுகள் வளர வளர அது நம்மை மேலும் அச்சுறுத்தும்.
நமது கனவின் கருவானது பெரும்பாலும் நமது பாதுகாப்பிற்கு எழும் சவாலாகவோ அல்லது உயிர் பயத்தை காட்டுவதாகவோ இருக்கும்.
நமது கனவுகள் நம்மை விழித்தெழச் செய்யும். தொடர்ந்து நாம் பீதியடைவோம், கோபம் கொள்வோம், வருத்தம் அல்லது வெறுமையாக உணர்வோம்.
வியர்வையால் நனைந்து எழுந்த நமது இதயமிடிப்பு அதிகமாக இருக்கும், ஆனால் படுக்கையை விட்டு வெளியேற அஞ்சுவோம்.
நம்மை அச்சுறுத்தி திடுக்கிட்டு எழ வைத்த கனவு சீக்கிரத்தில் நம்மை மீண்டும் தூங்க வைக்கும்.
இதுபோன்ற துர்கனவுகளால் நமது அன்றாட இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகள் புலப்படும் எனில், நமக்கும் அந்த வியாதி இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.
விளைவுகள்
தூக்கத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இருப்பவர்கள், பகல் வேளைகளில் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள், இதனால் பணியிடங்களில், பள்ளி, கல்லூரிகளில், நமது நவனத்தை ஊன்றி எதுவும் செய்ய முடியாத சூழல் உருவாகும்.
கனவுகள் தொடர்ந்து அச்சுறுத்துவதால் நாம் தூக்கத்தையே வெறுக்கும் சூழலும் உருவாகலாம்.
காரணம் என்ன?
இரவு தூங்கப்போவதற்கு முன்னர் பயங்கரமான கதைகள் கொண்ட புத்தங்கள் மற்றும் திரைப்படங்களை பார்ப்பது போன்ற காரணங்களால் இது போன்ற அச்சுறுத்தும் கனவுகள் வரலாம்.
மது மற்றும் தேவையற்ற போதை மருந்துகளை பயன்படுத்துவது.
சிகிச்சைகள்
கனவு அச்சுறுத்தல் நோய்க்கு சிகிச்சை முக்கியமான ஒன்றாகும், மன அழுத்தம் குறைவதற்கான ஆலோசனைகள் (Counselling) அல்லது அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள்.
Medication சிகிச்சை என்பது கனவு அச்சுறுத்தல் வியாதிக்கு குறைவான அளவிலேயே பரிந்துரைக்கப்படுகிறது, இவை ஆழ்ந்து தூக்கத்தில் இருக்கும்போது திடுக்கிட்டு விழிக்காமல் இருப்பதற்கு உதவுகிறது.
கனவில் வந்த நபர் யார், நடந்தது என்ன என்பது பற்றி மீண்டும் மீண்டும் பேசும்போது, அவை உண்மையானவை இல்லை என்ற எண்ணம் மேலோங்கும்.
அதுமட்டுமின்றி கனவில் வந்தவற்றை ஒரு ஓவியமாக வரைந்துபாருங்கள், அவை இந்த கனவு அச்சுறுத்தல் வியாதி குறைவதற்கு உதவும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக