தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, October 17, 2015

மொகலாய கட்டட கலையின் முதல் சான்று “ஹுமாயூன் கல்லறை”


மொகலாயர்களின் கட்டட கலைக்கு இந்தியாவில் முதன்முதலாக அமைந்த குறிப்பிடத்தக்க சான்று என்றால் அது, அற்புதமான தோட்டத்தின் சூழலில் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறைதான்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள இந்த கல்லறை மதுரா சாலைக்கும் லோதி சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. நிஜாமுதின் தர்ஹாவுக்கு வடகிழக்கிலும் எதிரிலுமாக உள்ளது.
யமுனை நதிக்கரையில் இந்த கல்லறை அமைக்க இடம் தெரிவு செய்யப்பட காரணம், மொகலாய வம்சத்தின் டெல்லி ஆட்சியாளர்களால் வணங்கப்பட்டும் திருவிழா செய்யப்பட்டும் வந்த நிஜாமுதின் அவுலியாவின் தர்ஹாவுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்பதால் தான்.
ஹுமாயூன் வாழ்ந்த காலம் (1508 - 1556):
இந்த கல்லறை ஹுமாயூன் இறந்து 9 வருடங்கள் கழித்து அவருடைய மூத்த விதவை மனைவியான பேகா பேகத்தால் கட்டப்பட்டது.
இது கட்டி முடிக்கப்பட்ட காலம் (கி.பி.1565- 1572) ஆகும். இதை கட்டிய நிபுணர் மிரக் மிர்ஷா கியாத் என்பவர்.
இந்த சமாதி உள்ளே முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் அதன் சுவர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் உள்ளே மத்தியில் இருக்கும் இரண்டு குவிமாடங்கள், முதலில் இருக்கும் நான்கு விகிதாச்சர சமாதிகள் அதற்கு செல்லும் பாதைகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்நிலை கால்வாய்கள் காணவேண்டியது. சஹர்பாஹ் எனப்படும் தோட்டத்தின் சதுக்கம் இங்கு முக்கியமானதாக உள்ளது.
மொகலாய சாம்ராஜ்யத்தின் பல மன்னர்களுடைய சமாதிகள், இங்கு உள்ள சுவர் எல்லைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதியாக, பேரரசரான, இரண்டாம் பகதுர் ஷா விடம் இருந்து லெப்டினெண்ட் ஹட்சன் நாட்டை கைப்பற்றினார்.
அதன் தாக்கமாக, 1860ல் இந்த கல்லறை தோட்டத்தின் சில பகுதிகளின் கட்டடங்கள் ஆங்கிலேயர் பாணியில் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹுமாயூன் கல்லறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த ஒன்றை மட்டும் அங்கு பார்க்கப்போவதில்லை.
மொகலாய வம்சத்தின் பல வரலாற்று நினைவுச் சின்னங்களையும், அந்த சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் குடும்பத்தினர் சமாதிகளும் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
சாஹர் பாஹ் தோட்டம், இஷா கான் நியாஸி கல்லறை, அஃப்ஸர்வாலா கல்லறையும் அதையொட்டி அஃப்ஸர்வாலா மசூதியும், பு ஹலிமா சமாதி, , பார்பர் கல்லறையும் இங்கே அருகருகே உள்ளது.
நிலா கும்பத் கா கல்லறை இந்த வளாகத்துக்கு வெளியில் நீலநிற வட்ட மண்டபத்தோடு காட்சியளிக்கிறது. இது மொகலாயர்களின் பிற்கால சேர்க்கையாகும்.
டெல்லியிலிருந்து இந்த கல்லறைக்கான மாநகர நிலையம் ஜே.எல்.என். விளையாட்டரங்கமே ஆகும்.
ஹுமாயூன் கல்லறை எல்லா நாட்களுமே பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்படும் நேரம்: சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமம் வரை.
இந்தியர்களுக்கு 10 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 250 ரூபாயும் வீடியோ அனுமதிக்கு 25 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால், வட இந்தியாவை ஆட்சிசெய்து வந்த மொகலாயர்களின் காலத்துக்கு சென்றுவிட்டு திரும்பும் ஒரு புதிய உணர்வு இங்கு சென்று வந்தால் ஏற்படுவது நிச்சயம்.

No comments:

Post a Comment