உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
இவர்களால் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் எலிகள் மற்றும் குரங்குகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கமாகும்.
ஆனால் முதன் முறையாக புதிய வகை எய்ட்ஸ் நோய் தடுப்பூசி ஒன்றினை நேரடியாக மனிதர்களிலேயே பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசியானது அமெரிக்காவைச் சேர்ந்த Robert Gallo என்பவரால் 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளான 60 பேர் பயன்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து இப்பரிசோதனையில் பங்கெடுக்கின்றனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக