தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 பிப்ரவரி, 2015

கர்ப்பிணிகளுக்கு நன்மைகளை அள்ளித்தரும் “சொக்லேட்”

கர்ப்ப காலத்தில் சொக்லேட் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
* கொக்கோ என்னும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் சொக்லெட்டில் தியோபுரோமைன் உள்ளது.
இவை கர்ப்பிணிகளின் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
* சொக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், பிரச்னைகள் இல்லாமல் சிசு ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
* இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம், கர்ப்பிணிகளின் உடலில் ஹீமோகுளோபினை சீராக பராமரிக்க உதவுகிறது.
* டார்க் சொக்லேட்டை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.
* டார்க் சொக்லெட் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதாலும், அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டிருப்பதாலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக