தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

சண்டே ஸ்பெஷல்- முட்டை தம் பிரியாணி


முட்டை தம் பிரியாணி
பிரியாணி என்றாலே அதற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கென்று சொல்லலாம். அதிலும் முட்டை சேர்த்துக் கொண்டால் சொல்லவா வேண்டும்.
ஹோட்டலில் வாங்கி சுவைப்பதை விட வீட்டிலேயே மிக எளிதில் முட்டை தம் பிரியாணி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் 
பாசுமதி அரிசி - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை- தேவையான அளவு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி- தேவையான அளவு
தயிர் - 1/4 கப்
முட்டை - 4-6 (வேக வைத்தது)
புதினா, கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை கால் மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வீட்டு, 90 சதவிகிதம் அரிசியை வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் கிளறி விட வேண்டும்.
பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கிய பின், மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து பிரட்டி விட்டு, மசாலாவானது நன்கு சேர்ந்த நிலையில் வேகவைத்த முட்டையை கீறி போட்டு பிரட்டிவிட வேண்டும்.
இதில் வேகவைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கிளறவும், விரும்பினால் 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
8-10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து தம் போடவும், கிரேவி நன்றாக வற்றிய பின் 5 நிமிடங்கள் கழித்து முட்டை உடையாதவாறு கிளறினால் சுவையான முட்டை தம் பிரியாணி ரெடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக