குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சொக்லேட், பெரியவர்களுக்கும் அதிக நன்மைகளை தருகிறது.
சொக்லேட்டை அளவோடு சாப்பிடுவதன் மூலம், அது அளிக்கும் நன்மைகளை அனைவரும் பெறலாம்.
சொக்லேட்டின் நன்மைகள்
பெண்கள் கர்ப்ப காலத்தில் சொக்லேட் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைப்பது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
'கொக்கோ' என்னும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் சொக்லேட்டில் தியோபுரோமைன் உள்ளது. இது கர்ப்பிணிகளின் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது.
சொக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், பிரச்சனைகள் இன்றி சிசு ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம், கர்ப்பிணிகளின் உடலில் ஹீமோகுளோபினை சீராகப் பராமரிக்க உதவுகிறது.
டார்க் சொக்லேட் சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
டார்க் சொக்லேட் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதாலும், அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்டை கொண்டிருப்பதாலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.
மனம் சோர்வாக இருக்கும் போது, கொஞ்சம் சொக்லேட் சாப்பிட்டால், உங்களுக்குள் உற்சாகம் பாயத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக