இதில், அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவாக சமர்ப்பிக்கப்படுவது எலுமிச்சை. இதனை மாலையாகவும் அணிவிப்பார்கள்.
எதற்காக எலுமிச்சம் பழத்தை அணிவிக்கிறார்கள்?
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது.
காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது.
எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும், தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது நம்பிக்கை.
அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், தங்களின் பிரார்த்தனைகளை மனதில் நினைத்துக்கொண்டு பூவையோ, பழங்களையோ கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள்.
இதுவே, காலங்காலமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் இதனையே கொஞ்சம் அறிவியல் ரீதியாக பார்த்தால், எலுமிச்சையில் குளிர்ச்சி நிறைந்துள்ளதால், அதனை கோயில்களில் தொங்கவிடும்போது அங்கு ஈரப்பதம் அதிகரிக்கிறது.
இதனால் கோயில்களுக்கு வரும் மக்களுக்கும், தங்கள் உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக