இன்று காதலர் தினத்தை காதலர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
மலர்கள், பரிசுகள் என்று பரிமாறிக் கொள்வார்கள்.
எப்போதும், தங்கள் காதலனோடு சண்டையிடும் பெண்கள், இன்று கொஞ்சம் அன்பாகவும், அழகாகவும் நடந்து கொள்ள சில ஐடியாக்கள் இதோ,
அழகு
இன்று காதலனோடு வெளியே செல்லுகையில், அழகான ஆடையை தெரிவு செய்து அணியுங்கள்.
பார்ப்பதற்கு நீங்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொல்லை வேண்டாமே
மற்ற நாட்களில் உங்கள் காதலனை நச்சரிக்கும் நீங்கள், இன்று அவற்றையெல்லாம் சற்று ஒதுக்கி வைக்கலாம்.
சண்டையை ஒதுக்கிவைத்துவிட்டு, முழுக்க முழுக்க காதல் மழை பொழியுங்கள்.
பரிசுகள்
வழக்கமாக கொடுக்கும் பரிசுகளை கொடுக்காமல், உங்கள் காதலனுக்கு என்ன பிடிக்குமோ, அதனை பரிசாக கொடுத்து மகிழ்ச்சி கடலில் மூழ்கவையுங்கள்.
ஒப்பிடாதீர்கள்
என் தோழிக்கு, அவளுடைய காதலன் அது வாங்கி கொடுத்தான், அவளுடைய காதலன் அப்படி, இப்படி என்று ஒப்பிடாதீர்கள், இது உங்களுடைய காதலனை எரிச்சல்படுத்தும்.
அடுத்த ஆண்கள்
உங்கள் காதலனோடு இருந்து கொண்டு, வேறு ஆண்கள் பற்றி புகழ்ந்து பேச வேண்டாம். அப்படி செய்தால், இன்றை காதலர் தினம், கசப்பு தினமாக மாறிவிடும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக