அரச கம்பீரத்துடன் நிற்கும் அழகிய வெர்சாய் அரண்மனை (வீடியோ இணைப்பு)
வெர்சாய் அரண்மனை என்பது பிரான்சில் உள்ள வெர்சாய் என்னும் நகரில் அமைந்துள்ள ஓர் அழகான அரண்மனையாகும்.
பிரான்ஸில் உள்ள வெர்சாய் நகரில் உள்ள இந்த அரசு மாளிகை முழுமையான மன்னராட்சி முறைக்கு அடையாளமாக விளங்குகிறது.
பிரான்சின் பெருமைக்குரிய சரித்திரத்தையும், கலாச்சாரத்தினையும் பார்க்கும்போது வெர்சாய் நகரத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.
1682 முதல் 1789 வரை அதிகார மையமாக இருந்த இந்த அரண்மனையைக் கட்டுவதற்கு 50 ஆண்டுகளும் 2 பில்லியன் டொலர்கள் செலவு ஆகியுள்ளது.
அரசர்கள் மற்றும் அரசிகள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்த அரண்மனையைச் சுற்றி 2,000 ஏக்கரில் அழகான பசுமையான தோட்டங்கள் உள்ளது.
1575ம் ஆண்டில் கோந்தி(Gondi) குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வந்த வெர்சாய், தொடர்ச்சியாக 1622ல் மன்னர் 13ம் லூயியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
பின்னர் 1662ல் 14ம் லூயி மன்னர் பாரிஸை மையப்படுத்தி இருந்த சாம்ராஜய்த்தை வெர்சாய்க்கு மாற்றியதன் தொடர்ச்சியாக 15ம், 16ம் லூயி மன்னர்களால் பல கட்டிடங்களும், அலங்கார ஸ்தலங்களும் நிர்மாணிக்கப்பட்டு வெர்சாய் நகர சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டது.
1777ல் வனப்புமிகு அரச ஒபேரா இசையரங்கு கட்டப்பட்டதோடு அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய அரங்காக விளங்கியது.
இந்த அரங்கில் 1789ம் ஆண்டு நடந்த 16ம் லூயி அரசரை கெளவரவிக்கும் நிகழ்ச்சி தான் அரச குடும்பம் சார்பாக இறுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.
மேலும் அரண்மனையில் அதி நுட்ப கட்டிட வேலைப்பாடுகளும் அழகிய பூந்தோட்டமும் விசாலமான பிரதேசத்தில் அமைந்துள்ளது.
பல்வேறுபட்ட வரலாற்று, இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இவ் அரண்மனை, பிரான்சில் முக்கிய சுற்றுலாப்பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக