தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 பிப்ரவரி, 2015

சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!

 
மும்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற இருவரும் படைக்கும் கடவுளான பிரம்ம தேவனும், காக்கும் கடவுளான விஷ்ணு பகவானும். சிவபெருமான் அழிக்கும் கடவுள். சிவபெருமானை கடவுளுக்கு எல்லாம் கடவுளாக, மகாதேவன் என அழைக்கின்றனர். அவருக்கு எல்லையில்லை, உருவமில்லை. மற்ற இருவரை காட்டிலும் மிகப்பெரியவரும் இவரே.
 நாக சாதுக்கள் ஏன் உடை அணிவதில்லை? 
 http://tamil.boldsky.com/insync/pulse/2015/why-naga-sadhus-don-t-wear-clothes-007495.html
 அச்சந்தரும் வகையில் பல வடிவங்களை சிவபெருமான் எடுத்துள்ளார். அவையெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தவையும் கூட. மும்மூர்த்திகளில் எளிதாக கவர முடியும் என்றால் அதுவும் இவரையே. கடும் கோபக்காரராக விளங்குவரும் இவரே. அவரைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா? 
 சிவபெருமானை விழுங்கிய பெண் தெய்வத்தை பற்றிய கதை!!!
 http://tamil.boldsky.com/insync/pulse/2014/story-the-goddess-who-devoured-shiva-007161.html
 
சிவபெருமானின் பிறப்பு இந்து புராணத்தில் புகழ் பெற்ற கடவுள்களில் சிவபெருமானும் ஒருவர் தான் என்றாலும் கூட, அவருடைய பிறப்பை பற்றி வெகு சிலருக்கே தெரியக்கூடும். அதற்கு ஒரு கதை உண்டு. அது சதி கலந்த கதையாக இருந்தாலும் கூட மந்திரத்தை கட்டிப் போட்டதை போல் உணர வைக்கும். ஒரு முறை பிரம்மனும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்ற சண்டையில் ஈடுபட்டிருந்தனர். திடீரென அவர்கள் முன்பு அண்டத்தின் வழியாக மிகப்பெரிய ஒளியுடன் கூடிய தூண் ஒன்று தோன்றியது. அதன் அடிப்பகுதியும் மேற்பகுதியும் பூமியை நோக்கியும், ஆகாசத்தை நோக்கியும் சென்று கொண்டிருந்தது. 5000 வருடங்கள் கடந்தும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் அந்த தூணில் இருந்து சிவபெருமான் வெளிவந்ததை இரண்டு பேரும் பார்த்தனர். அவர் தான் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்ட இருவரும் இந்த அண்டத்தை ஆளும் மூன்றாவது சக்தியாக அவரை ஏற்றுக்கொண்டனர்.
ராக் ஸ்டார் கடவுள் கடவுள்களுக்கென இருக்கும் மரபு ரீதியான விதிமுறைகளை தகர்த்து எறிந்தவர் தான் சிவபெருமான். புலித்தோல் அணிபவரான அவர், சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை உடல் முழுவதும் தடவியிருப்பார். அதேப்போல் மண்டை ஓடுகளால் செய்யப்பட மாலையை அணிந்திருப்பார். தனக்கு துணையாக தன் கழுத்தைச் சுற்றி பாம்பையும் வைத்திருப்பார். அவர் கஞ்சாவை புகைப்பார் என்றும் அறியப்படுகிறது. அதேப்போல் பித்துப்பிடித்தவரை போல் நடனமும் ஆடுவார். தன் ஜாதியில் இல்லாத பழக்கத்தை பின்பற்றுபவரை போல் அனைத்தையும் செய்தவர் தான் இக்கடவுள்.


நடனக்கடவுள் சிவபெருமானை நடராஜர் என்றும் அழைக்கின்றனர். அப்படியானால் நடனத்திற்கு ராஜா என அர்த்தமாகும். அவர் ஒரு சிறந்த நடன கலைஞராக அறியப்படுபவர். அவருடைய அந்த நிற்கும் தோரணை உலகம அறிந்ததே. அவருடைய வலது புறத்தில் சின்ன முரசு ஒன்றை வைத்திருப்பார். அது படைத்தலை குறிக்கும். அவருடைய நடனம் இந்த அண்டத்தின் அழிவை குறிக்கும். இதனை ருத்ரதாண்டவம் என்ற அழைக்கின்றோம். இயற்கையை மீண்டும் உருவாக்குவதற்கான நேரம் இது என பிரம்மனுக்கு தரப்படும் அறிகுறியும் கூட இது.

விஷ்ணுவுக்காக வாணர் அவதாரம் மற்றொரு ராக் ஸ்டார் கடவுளாக அறியப்படுபவர் சக்தி வாய்ந்த அனுமான். சிவபெருமானின் 11 ஆவது அவதாரமாக இவர் கருதப்படுகிறார். விஷ்ணு பகவானின் அவதாரமான ராம பிரானின் மீதுள்ள அனுமானின் பக்தியை பற்றி அனைவருக்கும் தெரியும். விஷ்ணு பகவான் மீது சிவபெருமான் வைத்திருந்த பக்தியை இந்த பந்தம் எடுத்துக்காட்டும்.
நீலகண்டர் இந்து புராணத்தில் மற்றொரு புகழ் பெற்ற கதையாக விளங்குவது அமுதம் எடுக்க பாற்கடலை கடைந்த (சமுத்ர மந்தன்) கதை. சிரஞ்சீவியாக இருக்க உதவும் அமுதத்தை எடுக்க தேவர்களும் அசுரர்களும் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். அதன் படி, பாற்கடலை கடைந்தனர். மந்தாரா மலை தான் கடையும் மத்தாக இருந்தது. கடையும் கயிறாக வாசுகி (சிவபெருமானின் பாம்பு) பயன்படுத்தப்பட்டது. ஆனால் முழு பாற்கடலும் கடையப்பட்டதால், அது பேரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கியது. அப்போது ஹலாஹல் என்ற பொருள் கிடைத்தது. இது அண்டத்தையே நஞ்சாக்கி விடும் தன்மையை கொண்டிருந்தது. அப்போது உள்ளே வந்த சிவபெருமான் அந்த விஷத்தை தானே விழுங்கினார். ஆனால் விஷம் பரவாமல் இருக்க அவர் தொண்டையை பிடித்து விட்டார் பார்வதி தேவி. இதனால் நீல நிறத்தில் மாறியது சிவபெருமானின் தொண்டை. அதனால் தான் அவர் நீலகண்டர் என அழைக்கப்பட்டார்
 
யானை முக கடவுளுக்கு பின்னணியில் இருக்கும் காரணம் தன் உடலில் உள்ள மண்ணை கொண்டு பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவரே விநாயகர். தன் மூச்சை கொடுத்து விநாயகருக்கு உயிரை அளித்த பார்வதி, சிவபெருமானுக்கு நந்தி தேவி இருப்பதை போல் தனக்கும் விநாயகர் விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைத்தார். ஒரு முறை சிவபெருமான் வீட்டிற்கு வந்த போது, பார்வதி தேவி குளித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த விநாயகர் சிவபெருமானை தடுத்து நிறுத்தினார். இதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், விநாயகர் யார் என்ற விவரம் அறியாமல் அவரின் தலையை துண்டித்தார். இதனால் அவமானமடைந்தார் பார்வதி தேவி. அப்போது தான் தன் தவறை உணர்ந்தார் சிவபெருமான். அதனால் ஒரு யானையின் தலையை விநாயகருக்கு பொருத்தி அவருக்கு உயிரளித்தார். இப்படி பிறந்தவர் தான் யானை முகத்தை கொண்ட விநாயகர்
 
பூதேஸ்வரன் நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல் மரபுகளுக்கு அப்பார்பட்டவராக விளங்கினார் சிவபெருமான். சுடுகாட்டில் வாழ்ந்து வந்த அவர் சவத்தின் சாம்பலை எடுத்து உடலில் பூசிக்கொண்டிருந்தார். அவருக்கு இருக்கும் பல பெயர்களில் பூதேஸ்வரரும் ஒன்றாகும். அப்படியானால் பூதங்கள் மற்றும் தீய சக்திகளின் கடவுளாகும். அதை தான் இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

ட்ரையம்பக தேவன் சிவபெருமானை ஒரு அறிவொளியாக தான் நாம் பார்க்கிறோம். ட்ரையம்பக தேவன் என்றால் மூன்று கண்களை கொண்ட கடவுள் என்பதாகும். சிவபெருமானுக்கு மூன்றாவது கண் ஒன்றும் உள்ளது. யாரையாவது கொல்ல அல்லது அழிவை ஏற்படுத்துவதற்கு மட்டுமே அவர் இந்த கண்ணை திறப்பார். தன் மூன்றாவது கண்ணை கொண்டு ஆசைகளை சாம்பலாக்கும் கடவுளாக இவர் அறியப்படுகிறார்.
 
மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மிருகண்டு மற்றும் மருத்மதி தம்பதிக்கு, சிவபெருமானை பல ஆண்டு காலம் வணங்கி வந்த பிறகு, மார்கண்டேயன் பிறந்தான். ஆனால் தன் 16 வயது வரை மட்டுமே அவன் வாழ்வான் என அவனுக்கு விதி எழுதப்பட்டிருந்தது. மார்கண்டேயனும் கூட சிவபெருமானின் தீவிர பக்தனாவான். அவனின் உயிரை எமதர்மனின் தூதர்களால் எடுக்க முடியவில்லை. மரணத்தின் கடவுளான எமனே நேரில் வந்து மார்கண்டேயனின் உயிரை எடுக்க வந்தார். ஆனால் வந்தவரோ சிவபெருமானுடன் சண்டையிட்டு உயிரை இழந்தார். மார்கண்டேயன் எப்போதும் சிரஞ்சீவியாக வாழ்வான் என்ற நிபந்தனையோடு எமனுக்கு மீண்டும் உயிரை அளித்தார் சிவபெருமான். இதனால் அவருக்கு கலண்டகர், அதாவது மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என அர்த்தமாகும்
 
பாலின சமுத்துவத்தை ஊக்கப்படுத்தியவர் சிவபெருமானுக்கு அர்தநாரீஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த பெயருக்கு ஏற்றது போல் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆண் மற்றும் பெண்ணின் உருவங்கள் இணைபிரியாதவை என்பதை இங்கே நமக்கு சிவபெருமான் எடுத்துக்காட்டுகிறார். கடவுள் என்பவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என்பதையும் கூறுகிறார். சொல்லப்போனால் அவர் இரண்டுமே. அவர் எப்போதும் பார்வதி தேவியை மரியாதையுடனும், தன்னில் பாதியாகவும் கருதினார். ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அவர் முற்போக்குவாதியாக இருந்தார்.

http://tamil.boldsky.com/insync/pulse/2015/10-lesser-known-facts-about-lord-shiva-007554.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக