தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 பிப்ரவரி, 2015

கற்களை என் மீது வீசுங்கள்


இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியம் நிறைந்ததே.
அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் எண்ணிலடங்கா,
மகாத்மா காந்தி ஒரு நாள் நண்பரின் காரில் போய்க் கொண்டிருந்தார், காந்தியின் மீது கோபம் கொண்டிருந்த சிலர் கற்களை கார் மீது வீசினர்.
காரை நிறுத்தச் சொன்ன காந்தி, காரை விட்டு இறங்கி கற்களை வீசியவர்களிடம் கார் நண்பருடையது, உங்களுக்கு என்மேல் தானே கோபம்.
உங்கள் கோபம் தீரும் வரை கற்களை எடுத்து என்மேல் எறியுங்கள், உங்கள் கோபத்தை நான் தாங்கிக் கொள்கிறேன் என்றார்.
கல் எறிந்தவர்கள் அவமானத்தில் வெட்கித் தலைகுனிந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக