ஒரு விவசாயின் குதிரை உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.அதனால் நடக்க கூட முடியவில்லை. உடனே அந்த விவசாயி டாக்டரை அழைத்து வந்து காண்பித்தான் . டாக்டர் குதிரையை நன்றாக பரிசோதித்து விட்டு சொன்னார்..நான் மூன்று நாட்களுக்கு மருந்துக் கொடுக்கிறேன் .இந்த மூன்று நாட்களுக்குள் குதிரை எழுந்து நடக்கவிட்டால் இதை கொல்ல வேண்டி இருக்கும் ..ஏனென்றால் இதற்க்கு வந்திருப்பது பெரிய நோய் ,உயிருடன் விட்டால் மற்ற மிருகங்களுக்கும் தொற்றி கொள்ளும் என கூறி சென்று விட்டார். இதை அங்குள்ள ஆடு கேட்டு கொண்டு இருந்தது. அது உடனே குதிரையின் அருகில் சென்று நீ எப்படியாவது கஷ்டப்பட்டு நடந்து விடு..இல்லேன்னா உன்னை கொன்று விடுவார்கள் என கூறியது. அடுத்தநாளும் டாக்டர் வந்து மருந்து கொடுத்தார் ..குதிரை எழுந்திருக்க வில்லை. அந்த ஆடு மிகவும் கவலை கொண்டு மீண்டும் குதிரைக்கு ஊக்கம் கொடுத்து எழ சொல்லியது.ஆனால் முடியவில்லை. மூன்றாவது நாள் டாக்டர் வந்து மருந்து கொடுத்து விட்டு சொன்னார் ...இன்றும் குதிரை நடக்கவில்லை என்றால் நாளை இதை கொன்று விடுங்கள் என்று. ஆடு மிகவும் வருத்தம் கொண்டு குதிரை நண்பனை ஊக்குவித்து எழுந்து ஓட வைத்து.. குதிரை எழுந்து ஒடுவதை பார்த்த அந்த விவசாயிக்கு சந்தோஷம் தாங்கவில்லை .. அவன் வீட்டுக்குள் இவ்வாறு கத்திகொண்டே ஓடினான் ....... "குதிரை ஓட ஆரம்பித்து விட்டது..அதை கொண்டாட, . . . . . . . . . . . . விருந்து வைப்போம் ஆடு வெட்டி" என்று ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக