கிரீஸ் நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஏசுநாதர் சிலையிலிருந்து கண்ணீர் வடியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டின் அஸ்புரோகாம்போஸ்(Asprokambos) நகரிலுள்ள செயின்டு நிகோலஸ்(St Nickolas) என்ற தேவாலயத்தில் இருக்கும் ஏசுநாதர் சிலையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் கண்ணீர் போன்ற திரவம் வடிந்துக்கொண்டே இருப்பதாக அங்குள்ள பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி நகர் முழுவதிலும் பரவியதால், இந்த அதிசயமான காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தேவாலயத்திற்கு படையெடுத்தனர்.
அங்கு சிலுவையில் அறையப்பட்டுருந்த ஏசுநாதர் கண்களிலிருந்து வாசனையற்ற கண்ணீர் போன்ற திரவம் வழிந்துக்கொண்டே இருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கிரீஸ் சம்பரதாயப்படி அங்குள்ள தேவாலயத்தில் தலைமை மதகுருவான இரண்டாம் Ieronymos முன்னிலையில் தான் பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்வது தான் வழக்கம்.
ஆனால் புதிய பிரதமராக பதவியேற்ற அலெக்சீஸ் ஸ்பைரஸ்(Alexis Tspiras)கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால் இந்த வழக்கத்தை உடைத்தெரிந்து விட்டு அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவரது இச்செயல் ஏசுநாதருக்கு வருத்ததை ஏற்படுத்தியுள்ளதா? என தேவாலயத்தில் திரளும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அந்த தேவாலயத்தின் மதகுரு பேசியதாவது, சரியான ஆதாரங்கள் மற்றும் பரிசோதனைகள் இல்லாமல் உறுதியான முடிவுகளுக்கு வர முடியாது என்றும் இந்த சூழ்நிலையை பற்றி கீரிஸ் தலைமை தேவாலயத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக கீரிஸில் உள்ள ஒரு பிரபலமான ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவது சாதாரணம்.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால் சிலுவையில் உள்ள வண்ண சாயங்கள் கரைந்து வடிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக