இந்தியாவின் கலாசார மாநிலமாக திகழ்கிற பஞ்சாப்பில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. |
இசை, நடனம், ஆடை அணியும் விதம் என பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் பஞ்சாப்பில் சீக்கியர்களே பெரும்பாலானவர்கள் வசிக்கிறார்கள். தங்கக் கோயில், பல உயிர்களை பறித்த ஜாலியன் வலாபாக் படுகோலை நடந்த கோட்டைகள் இங்கு அமைந்துள்ளது இதன் சிறப்பு. கம்பீரமான கோட்டைகள், அரண்மனைகள், வரலாற்று யுத்த தலங்கள் என பல்வேறு இடங்கள் வெளிநாட்டு மக்களை கவர்கின்றன.
கோபிந்த்கர் கோட்டை
பஞ்சாப்பின் அம்ரிஸ்தர் நகரில் அமைந்துள்ள இந்த கோட்டை, குஜ்ஜார் சிங் பாங்கி என்பவரால் கட்டப்பட்டது.1919ம் வருடத்தில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டையர் இந்த பான்சி கர் மாளிகையில்தான் வசித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின் இந்த கோட்டை இந்திய ராணுவத்தினர் வசம் வந்தது. 1948ம் ஆண்டு பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க இது பயன்பட்டது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக் கோட்டை 2006ம் ஆண்டு பஞ்சாப் முதல் அமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.
கிலா முபாரக் கோட்டை
ராஜா மோகல்ஸியால் என்பவரால் கிலா முபாரக் கோட்டை கட்டப்பட்டது. இந்த பழைய நினைவுச்சின்ன வளாகத்தில் அரச அரண்மனை, டொஸ்ஹ க்ஹனா, மோடி க்ஹனா மற்றும் கருவூலம் போன்றவை உள்ளன.
ஷீஷ் மஹால்
ஷீஷ் மஹால் கண்ணாடி மாளிகை என்று அழைக்கப்படுகிறது, 1845-ஆம் ஆண்டு ஷீஷ் மஹால் நரேந்தர சிங் மகாராஜாவால் இது கட்டப்பட்டது.அழகிய தோட்டங்கள், அடுக்குத்தளங்கள், நீரூற்றுகள் போன்றவை இதனை இன்னும் அழகுபடுத்துகின்றன.
மஹாராஜா ரஞ்சித் சிங்
ராஜவம்சத்தினரின் கோடைகால மாளிகையாக விளங்கிய இந்த கோட்டை பின்னர் மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது.பஞ்சாப் பகுதியை ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள், அரசவைக்காட்சிகள், ராஜ வம்சத்தினரின் கூடார வாச காட்சிகள் போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ள வண்ண மை ஓவியங்களையும் இங்கு பார்க்கலாம். உலகப் பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரத்தின் மாதிரி வைரம் ஒன்றும், மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் பயன்படுத்திய முத்திரை பொதிக்கப்பட்ட பர்வானா ஒன்றும் இங்குள்ள இதர விசேஷமான காட்சிப் பொருட்களாகும். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 28 பிப்ரவரி, 2015
வரலாற்றை பறைசாற்றும் பஞ்சாப் கோட்டைகள் (வீடியோ இணைப்பு)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக