கூகுள் நிறுவனத்தினால் 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வரும் சட்டிங் மற்றும் குரல்வழி, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியான Google Talk இனை பயன்படுத்துவதற்கு தனியான அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனை விண்டோஸ் இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்து நிறுவிப் பயன்படுத்தும் வசதி நிறுத்தப்படவுள்ளது.
இம்மாதம் 25ம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ள இச்சேவைக்கு பதிலாக கூகுள் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Hangouts சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எனினும் Google Talk இற்கு பதிலாக Pidgin போன்ற மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக