USB (Universal Serial Bus) தகவல் பரிமாற்றத்திற்கும், கணனிக்கும் அதன் சாதனங்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது.
1994ம் ஆண்டு Compaq, DEC, IBM, Intel, Microsoft, NEC, Nortel ஆகிய ஏழு நிறுவனங்கள் இணைந்து USB-யை உருவாக்கும் முயற்சியில் இறங்கின. மற்ற சாதனங்களை கணனியுடன் இணைப்பதில் எளிமை வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதன் பலனாக 1995ம் ஆண்டு Intel நிறுவனத்தில் அஜய் பாட்டின் தலைமையிலான குழு USB-யை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து USB 1.0 12 Mbit/s என்ற வேகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவை தகவல் பரிமாற்றத்திலும், கணனியுடனான தொடர்பை எளிதாக்குவதிலும் சிறப்பாக விளங்கியதால் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு USB 2.0, 2008ம் ஆண்டு USB 3.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது தகவல் பரிமாற்றத்திற்கான வேகத்தை 5 Gbit/s வரை கொண்டிருந்தது. இதனால் `சூப்பர் ஸ்பீடு’ என்ற சூப்பரான பெயரையை பெற்றது.
USB-ன் வடிவமைப்பானது USB Implementers Forum(USB-IF) மூலமாக தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இது கணனி மற்றும் மின்னணுத் தொழிற்துறைகளிலிருந்து முன்னணி நிறுவனங்களை ஒருங்கிணைக்கின்ற தொழிற்துறைத் தரநிலை அமைப்பாகும்.
மின்சாரம் வழங்குகின்ற ஹோஸ்ட் சாதனங்களின் ஒரு இணைப்பிகள் மற்றும் மின்சாரம் பெறுகின்ற இலக்கு சாதனங்களில் மற்றொரு இணைப்பிகள் இருப்பின், இது இரண்டு USB இரண்டு இணைப்பிகளையும் எதிர்பாராதவிதமாக தவறாக ஒன்றுக்கொன்று இணைப்பதிலிருந்து பயனர்களை தடுக்கின்றது.
இது ஆபத்தான உயர் மின்னழுத்தங்கள், சுற்றுத் தோல்விகள் அல்லது நெருப்பைக்கூட தோற்றுவிக்கும். அதனால் பயனர்களை பாதுகாப்பதில் இதுபோன்ற USB முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த USB சாதனங்கள் தங்களுக்குள் இணக்கமற்றதாக இருப்பதால், சுழற்சி நெட்வொர்க்குகளையும் தரநிலையான இணைப்பிகளையும் ஆதரிக்காது.
சந்தைகளில் வரவேற்கத்தக்க இந்த USB ஒவ்வொரு ஆண்டு இரண்டு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைக்கிறது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, 13 பிப்ரவரி, 2015
சந்தைகளில் சாதனை படைக்கும் USB
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக