தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, February 23, 2015

மருத்துவ செய்தி தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்


தலைவலி ஏற்பட்டால் எந்த வேலையையும் சரியாக செய்ய இயலாது.
தாங்கி கொள்ள முடியாத தலைவலியால் நாம் செயலிழந்து காணப்படுவோம்.
இத்தகைய தலைவலியானது அதிக சப்தத்துடன் இசை கேட்டாலோ, அதிகப்படியான வாசனையினாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ ஏற்படக்கூடும்.
அத்துடன் ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும்.
சொக்லெட்
அடிக்கடி தலைவலி வருமானால், இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சாக்லெட்டானது தலைவலியை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.
காப்ஃபைன்
ஏராளமான மக்கள் தலைவலிக்கும் போது காபி குடித்தால், தலைவலி குணமாகும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் காபியை அளவாக குடித்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், அது கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
ஐஸ் க்ரீம்
பொதுவாக அதிக அளவில் குளிர்ச்சியுடன் இருக்கும் உணவுப் பொருட்கள் தலைவலியை ஏற்படுத்தும். அதிலும் ஐஸ்க்ரீமில் உள்ள அதிகப்படியான குளிர்ச்சியானது நரம்புகளை பாதித்து, தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
சிலருக்கு தைரமின் என்னும் கெமிக்கல் ஒப்புக் கொள்ளாது. அத்தகையவர்கள் வாழைப்பழத்தை உட்கொண்டால், கடுமையான வலியுடன் கூடிய தலைவலியை சந்திப்பார்கள்.
உலர் பழங்கள்
உலர் பழங்களான உலர் திராட்சை மற்றும் அத்திப் பழம் போன்றவையும் தலைவலித் தூண்டும்.
ஈஸ்ட்
வலியை தாங்கி கொள்ள முடியாதவர்கள், பிரட், பன் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
ஏனெனில் இத்தகைய பொருட்களில் ஈஸ்ட் அதிக அளவில் இருக்கக்கூடும். இதனால் இவை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment