வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.
இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என நாம் நினைப்பதுண்டு.
ஆனால் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச் சத்தும், அதனுடன் அதிகமான புரதச் சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
எனவே இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
வேர்க்கடலையின் மகத்துவங்கள்
வேர்க்கடலை சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிகவும் குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
இதில் இருக்கும் மெக்னீஷியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.
வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால், இதை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது.
வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.
இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.
வேர்க்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலை சட்னி
வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வாணலியில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
இந்த வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதன்பின் உப்பு சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் வேர்க்கடலை சட்னி ரெடி.
பயன்கள்
இதை சாப்பிடுவதால் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது.
கொழுப்பை குறைக்க ஒரு சிறந்த மருந்து.
வேர்க்கடலை குழம்பு
முதலில் புளியை நன்கு கரைத்து அதனுடன் வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வாணலியில் வேக வைக்கவும்
நன்கு வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பிறகு கொத்தமல்லித் தழை, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான வேர்க்கடலை குழம்பு தயார்.
பயன்கள்
இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
பளபளப்பான தோலையும் ஏற்படுத்த உதவுகிறது.
நரம்பு மண்டலம் மற்றும் பிற நரம்பு பிரச்சனைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக