தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பறவைக் காய்ச்சலை பரப்பும் காட்டுப் பறவைகள்

உலகை உலுக்கியெடுக்கும் நோய்களுள் பறவைக் காய்ச்சலும் முக்கிய இடம்பெறுகின்றது.
இந்தப் பறவைக் காய்ச்சலை குறிப்பிட்ட காலத்தில் ஒரு இடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு நகரும் பறவைகளே பரப்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது காட்டில் வாழும் பறவைகளே இக்காய்ச்சலுக்கு அதிகளவில் காரணமாக திகழ்கின்றன.
இதற்கு சான்றாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வாத்து பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு ரஷ்யாவில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் காரணமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யா, கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் H5N8 வைரஸ் காய்ச்சல் தொற்றுவதற்கும் இடம்பெயர்ந்த காட்டுப் பறவைகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக