தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலர் இல்லையே என்ற ஏக்கமா?


உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கி விட்டன.
அன்று தனக்கு காதலர் இல்லை என ஏங்குபவர்களுக்காக புது வித அப்ளிக்கேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர் மாத்யு ஹோமன், கைல் டபோர்.
“Invisible Boyfriend” என்ற இந்த அப்ளிகேஷனில் உங்களுக்குப் பிடித்த பெயர், பிடித்த உருவம், குணாதிசயங்கள் என அனைத்தையும் தெரிவு செய்து கொள்ளலாம்.
மேலும் உங்களுடைய தகவல்களையும் அதில் குறிப்பிட்டு விட்டால், சிறிது நேரம் கழித்து உங்களது பாய் ஃப்ரண்டிடம் இருந்து மெசெஜ் வரும்.
அதுதவிர மெயில் வரும், தொலைபேசியில் உரையாடவும் முடியும். நீங்கள் எப்படி எல்லாம் பாய்ஃப்ரெண்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் இந்த இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் இருப்பார்.
தற்போது அமெரிக்காவிலும், கனடாவிலும் கிடைக்கக்கூடிய இந்த அப்ளிகேஷனை விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக