தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 பிப்ரவரி, 2015

உயிரை குடிக்கும் மலேரியா! என்ன செய்யலாம்?

உலக மக்களை அச்சுறுத்தக்கூடிய பனிக்காலங்களில் பரவும் நோய்களில் மலேரியாவும் ஒன்று.
இவை அனாபிளாஸ் என்னும் ஒரு வகை பெண் கொசுவினால் பரவுகிறது.
சுத்தமற்ற தண்ணீரினால் தான் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன, கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.
எப்படி நோய் பரவுகிறது?
பென் அனோபிலிஸ் கொசுக்கள், தேங்கிய நீரில் வளர்ந்து மனித ரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. கொசுக்கடி மூலம் நம் உடலை வந்தடைந்த கிருமிகளால், ஒரு வாரங்களில் நோய் தீவிரமடைந்து, உடல் பாதிக்கப்படுகிறது.
மலேரியாக் கிருமி ரத்த ஓட்டத்தில் பிரவேசித்து சிவப்பு அணுக்களில் ஊடுருவி ஹீமோகுளோபினை அழித்து பல்கிப் பெருகும்.
இதன் விளைவாக சிவப்பு ரத்த அணுக்கள் நிலைகுலைந்து கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், மூளை, மண்ணீரல் போன்ற உறுப்புகள் செயலிழக்கின்றன.
அறிகுறிகள்
மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக கடுமையாகும்.
முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும்.
இரண்டாவது கட்டத்தில் உடலில் ஆடை அணி முடியாத அளவுக்கு காய்ச்சல் இருக்கும். பின்னர் காய்ச்சல் குறைந்து உடல் முழுவதும் வியர்க்கும்.
மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.
இதுதவிர தலைவலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.
இந்த நோய் தீவிரமானால் மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது.
தடுப்பு முறைகள்
1. வெளியில் சென்று வந்ததும் முதலில் முகத்திற்கு நன்கு சோப்பு போட்டு கழுக வேண்டும்.
இல்லையெனில் கைகளில் தொற்றியிருக்கும் கிருமிகள் நமது முகத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி விடும். தெருவில் நடந்து செல்லும் போது தண்ணீரில் மிதித்து நடக்க வேண்டிவரும்.
எனவே வீட்டிற்கு வந்ததும் முதலில் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். நமது கால்கள் மூலம் எளிதாக கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும் அளவுக்கு மிகவும் மிருதுவானது. ஆதலால் கால்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
2. சுத்தமான குடிநீரை காய்ச்சி பருகுவதால் கிருமிகள் ஏதேனும் இருந்தால் அவை அளிக்கப்பட்டு விடும்.
உங்களுடைய அறை காற்று வறையருக்கப்பட்டதாக இல்லாதிருப்பினும் தக்க தடுப்பு வசதியற்றதாக இல்லாதிருப்பினும், உங்கள் படுக்கையைச் சுற்றிலும் கொசு வலையைப் பயன்படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக பெர்மித்ரின் எனும் பூச்சிக் கொல்லி மருந்தைக் கொசு வலையின்மீது பூசவேண்டும்.
3. மலேரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், மருத்தவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
மேலும் பயணங்களை குறைவாக மேற்கொள்ள வேண்டும், அவ்வாறு சென்றாலும் தொடர்ந்து 4 வாரங்களுக்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
ஏனெனில் பயணத்தின் போதும், சிலவகை கிருமிகளால் இதன் தாக்கம் அதிகரிக்ககூடும்.
4. கல்லீரலில் தங்கியிருக்கும் கிருமிகள் மருந்து எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டால், மருந்தின் சக்தி குறைந்துவிடும்.
5. மீண்டும் மீண்டும் மலேரியா வந்தால் பலவீனம், சோர்வு, ரத்தச்சோகை, லேசான மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். நோயாளி பூரண ஓய்வு எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக