தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 பிப்ரவரி, 2015

பஞ்ச கம்மாளர் !!


பஞ்ச கம்மாளர் ஆபரணத் தொழில் செய்யும் தட்டார், உலோகத் தொழில் செய்யும் கன்னார், இரும்புத் தொழிலில் ஈடுபடுகின்ற கொல்லர், மட்பாண்டத் தொழில் செய்யும் குயவர் என்னும் கைவினைத் தொழில் செய்யும் சாதியாருடன் தச்சரையும் சேர்த்துப் பஞ்ச கம்மாளர் எனவும் அழைப்பதுண்டு. தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.

குயவர்
குயவர் என்பவர் மண்பாண்டக் கலையில் தேர்ந்தவர்களைக் குறிக்கும். இது ஒரு தொழில் சார்ந்த பெயரும், சாதிப் பெயரும் ஆகும். இவர்களும் விஸ்வகுலத்தில் உள்ளடக்கப்படுவர். மரவேலை, நகைத்தொழில், மட்பாண்ட வேலை, இரும்புவேலை மற்றும் கற்சிற்பங்கள் போன்ற கைவினை வேலை செய்பவர்கள் ஒருமித்த விஸ்வகுலத்தவர் அல்லது பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்றனர்.

பானை, சட்டி, குவளை, மண் அடுப்பு, சிற்பங்கள் (குதிரை, காவல் தெய்வங்கள், வாகனங்கள்) போன்றவற்றைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். 

கொல்லர்
இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு.

பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர்கள் எனப்படுகின்றனர். இவர்களைப் தட்டார் என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியை குறிக்கும்.


தச்சர்
மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சன் எனக் குறிப்பிடுவர். தமிழ் நாட்டில், சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருப்பதால், தச்சர் (தச்சன் என்பதன் பன்மைச் சொல்) என்பது மரவேலையாளர் சாதியையும் குறிக்கும். முற்காலத் தமிழகத்திலும், தமிழர் வாழும் இலங்கை போன்ற இடங்களிலும், மரவேலை மேற்படி சாதியாருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. தற்காலத்தில் இது பெருமளவு மாறிவிட்டதெனலாம்.

கற்களில் சிற்பங்கள் செய்யும் சிற்பிகளும் சில பண்டைய நூல்களில் கற் தச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆபரணத் தொழில் செய்யும் தட்டார், உலோகத் தொழில் செய்யும் கன்னார், இரும்புத் தொழிலில் ஈடுபடுகின்ற கொல்லர், மட்பாண்டத் தொழில் செய்யும் குயவர் என்னும் கைவினைத் தொழில் செய்யும் சாதியாருடன் தச்சரையும் சேர்த்துப் பஞ்ச கம்மாளர் எனவும் அழைப்பதுண்டு.

முற்காலத்தில் வீடுகள் போன்ற கட்டிடங்களைக் கட்டும்போது, தச்சரின் பங்கே முதன்மையாகக் கருதப்பட்டது. இன்றும் கூட இது தொடர்பான பாரம்பரியச் சடங்குகளில் தச்சருக்கு முதன்மை கொடுக்கப்படுவதைக் காணமுடியும்.

http://aathitamilan.weebly.com/2970300629803007296529953021/31

* கம்மாளர்
தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த "பஞ்ச கம்மாளர்" என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.
* கொல்லர்
இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு.
பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர்கள் எனப்படுகின்றனர். இவர்களைப் தட்டார் என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியை குறிக்கும்

https://books.google.nl/books?id=4DxgAAAAcAAJ&pg=PT452&lpg=PT452&dq=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+....&source=bl&ots=R7sVe5pf5z&sig=QQ-i4dCdoe0M5xjDzMHo86ym2-s&hl=nl&sa=X&ei=9DfuVLezOIPqUp7egbgK&ved=0CGUQ6AEwCQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20....&f=false

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக