நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், உடலில் நோய்கள் விரைவில் தாக்கும்.
ஆதலால் நோயெதிர்ப்பு மண்டத்தை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வதோடு குளிர்பானங்களையும் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை ஜூஸ் உதவியாக இருக்கும்.
ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி வளமையாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டீனாய்டு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது.
இதனை அன்றாடம் குடித்து வந்தால் நோய்களின் தாக்கம் குறைவதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும்.
மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.
கிவி ஜூஸ்
கிவி பழத்தை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் செய்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு வேண்டிய வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி கிடைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், புரோட்டீன் மற்றும் சல்பர் போன்றவைகள் வளமையாக நிறைந்துள்ளன.
எனவே முடிந்த அளவு கொஞ்சமாக பருகுங்கள். ப்ராக்கோலி ஜுஸ் சற்று கெட்டியாக இருப்பதால், இதனை மற்றொரு ஜூஸ் உடல் சேர்த்துப் பருகுங்கள்.
கேரட் ஜூஸ்
கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
அதற்கு கேரட்டை அன்றாடம் பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக