தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 பிப்ரவரி, 2015

சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் “தொட்டபெட்டா” (வீடியோ இணைப்பு)


தென்னிந்தியாவின் மிகப்பெரிய மலை, தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்ற சிறப்புகளோடு அமையப் பெற்றுள்ளது “தொட்டபெட்டா”.
ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் ஊட்டி- கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலை அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொட்டபெட்டா மலைக்கு கன்னடத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது தொட்ட என்றால் பெரிய என்றும், பெட்டா என்றால் மலை என்றும் பொருள்படும்.
அதன் அடிப்படையிலேயே இந்த பெரிய மலைக்கு தொட்டபெட்டா என்று பெயர் வந்துள்ளது.
ஆனால் சங்க காலத்தில் இந்த மலையை தோட்டி மலை என்றும், தொல்காப்பியத்தில் நளிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணை கவரும் தொட்டபெட்டா
ஊட்டியில் இருந்து சாலை வழியாக தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்லலாம்.
போகும் வழி எங்கும் பச்சை பசேலென்று இயற்கைக் காட்சிகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.
தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா.
இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன. அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.
தொட்டபெட்டா சிகரத்தின் மேல் ஒரு அழகான பூங்காவும் சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளும், இளசுகளும் பார்த்து மகிழ ஏற்ற இடமாக அது உள்ளது.
மேலும் இங்குள்ள அமைக்கப்பட்டுள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் நீலகிரி மாவட்டத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.
அத்துடன் சாலைகளில் ஆங்காங்கே முளைத்திருக்கும் கடைகளில் இயற்கை பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகைகள் சூடான பஜ்ஜிகள் மற்றும் பச்சைக் காய்கறிகள் கிடைக்கின்றன.
இவற்றை வாங்கி ருசித்துக் கொண்டு இயற்கையின் அழகை ரசிப்பது அலாதி பிரியம் தான்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக