மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை சமாளிக்க பெண்கள் பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், அவை முழுமையாக பலனளிப்பதில்லை.
அதிகமான உதிரப்போக்கு, நாட்கள் தள்ளிப்போவது என பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
ஆனால், இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியமாக வாழலாம்.
அருகம்புல்
தினமும் காலை அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். மற்றும் வயிறு உபாதைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கும்.
எள்
எள்ளைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து. மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறையும்.
கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூக்களை அரைத்து அதோடு எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.
செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
சோம்பு
சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால், மாதவிலக்குப் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக