பெருங்கடல்களை ஆராய்வதற்காக நீர்மூழ்கி கப்பலை விண்வெளிக்கு அனுப்ப நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் தனிப்பட்ட கிரகமாக உள்ளது டைட்டன், ஏனெனில் அதன் மேற்பரப்பில் மட்டுமே திரவ ஏரிகள் மற்றும் கடல்கள் உள்ளது.
கடல்களில் திரவ ஹைட்ரோகார்பன்கள் இருப்பதால், டைட்டானியன் கடல்கள் என்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கடலில் கீழே என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்க விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக டைட்டானின் மிகப்பெரிய வடக்கு கடலுக்கு அதாவது “கிரேக்கன் மேர்”-க்கு 2040ம் ஆண்டில் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
154,000 சதுர மைல்கள்(400,000 சதுர கிமீ) மற்றும் கிட்டத்தட்ட 300 மீட்டர்(1,000 அடி) ஆழம் பரந்து விரிந்துள்ள கிரேக்கன் மேருக்கு, அமெரிக்க விமானப்படை எக்ஸ்-37 போன்றே ஒரு சிறகுகளையுடைய விண்கலத்தை பயன்படுத்தி நீர்மூழ்கி கப்பலை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக