தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 ஜூன், 2014

உலக சுற்றுச்சூழல் தினம்- ஒரு சிறப்பு பார்வை

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் யூன் 5–ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச் சூழலலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
உலக சுற்றுச்சூழல் தினம்
ஐக்கிய நாடுகள் சபையால் 1972ம் ஆண்டில் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
முடிவில் யூன் 5–ஆம் திகதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அனுஷ்டிப்பது என முடிவு செய்யப்பட்டது.
உயிரினங்கள் தங்களுக்கிடையேயும், அவைகளின் சுற்றுப்புறச் சூழல்களுக்கிடையேயும் நடத்தும் வினைகள் மற்றும் எதிர்வினைகளின் ஒட்டுமொத்தம் தான் சுற்றுசூழல்.
உலகின் எல்லா உயிரினங்களும் அவை வாழ்வதற்காக இயற்கையையே நம்பி இருக்கின்றன.
மனிதனைப் பொறுத்தவரை ஆரம்பக் காலக்கட்டத்தில் காய், கனிகளுக்கும், வேட்டைக்கும் இயற்கையையே நம்பியிருந்தான்.
பின்னர் கால்நடைகளுக்கும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களுக்கும் இயற்கையை நம்பி வாழ்ந்தான்.
பின்னர் விதை விதைத்து விவசாயம் செய்தான் இதற்கும் மனிதனுக்கு இயற்கையே தேவைப்பட்டது.
தொழில்யுகத்திலும் மூலப்பொருட்களுக்கு மனிதன் இயற்கையை நம்பவேண்டியுள்ளது.
இவ்வாறு பொருளாதார, சமூக வளர்ச்சி என்பது இயற்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது.
ஆனால் தற்போதைய காலகட்டத்திலோ மனிதன் தனது சுயநலவாதத்தால் சுற்றுச் சூழலின் சுமூகமான நிலையை கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்பதே நிதர்சனமான உண்மை.

சுற்றுச்சூழல் மாசு
நவீன விஞ்ஞானதுறை, தொழில்நுட்பதுறை, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது.
இரசாயனக் கழிவுகள், புகை உள்ளிட்டவைகளால் நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியன மாசுபட்டு உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.
சுற்றுச்சூழலை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருப்பதை போல் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மனிதன் கடைமைபட்டுள்ளான்.
மனிதனின் வாழ்வதற்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க கூட முடியாது.
இதனை அறியமால் நாம் மரங்கள் தறித்து எடுத்து விடுகின்றோம். எனவே இத்தகைய சூழ்நிலைகளில் மனிதர்களின் அபிவிருத்திற்காகவும், அடுத்துவரும் நம்முடைய சந்ததிக்காகவும், இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேணி பாதுகாக்க வேண்டும்.

எவ்வாறு தடுப்பது?
சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் மரங்களே முதலிடம் பிடிக்கின்றன, மரங்கள் ஒருங்கிணைந்த காடுகள் இயற்கையின் நுரையீரலாக செயல்பட்டு சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் காவலர்களாக உள்ளனர்.
எனவே, முதலில் நாம் செய்ய வேண்டியது, மரங்கள் வெட்டுவதை தடுப்பது.
விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை ஏற்றுக்கொண்டு ஒருவர், இருவர் மட்டும் சுற்றுச்சூழலை பாதுகாத்தால் போதாது, அனைவரும் ஒருங்கிணைந்த காடுகளாக மாறி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

உறுதி ஏற்கவேண்டும்
சுற்றுச்சூழல் பாதிப்படைவதை தொடந்து புவி வெப்பமடைந்து வருவதும், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதையும் நாம் அனைவரும் அறிவோம்.
இன்றைய கோடைக்காலத்தை பற்றி சிந்தித்து பார்த்தால் புவி வெப்பமடைதலின் அனுபவத்தை உணரமுடியும்.
வளைகுடா நாடுகளில் முந்தைய அதாவது 1970 அல்லது 80 ஆம் ஆண்டுகளில் ஒரு கோடைகாலம் என்றால் எப்படியிருந்தது தற்பொழுது எப்படியுள்ளது என்பதை சிந்தித்தால் நிறைய வேறுபாடுகளை உணரலாம்.
இத்தகைய பாதிப்புகளில் இருந்து விடுபடவும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதுகாக்கவும் ஒவ்வோரு தனிமனிதனும் உறுதி எடுக்க வேண்டும்.
உறுதி எடுத்ததுடன் மட்டுமல்லாது அதனை எப்போது செயல்படுத்துகிறானோ அன்றே இயற்கையின் நண்பனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக