ஹட்டன் எபோட்சிலி மொட்டிதன் தோட்டத்தைச் சேர்ந்த திரு.திருமதி. பழனியாண்டி இந்திராணி ஆகியோரின் முதல் செல்லக் குழந்தைக்கு இப்போது வயது 28 ஆகும்.
ஆனால் பிறப்பிலே உடல் வளர்ச்சி குன்றியதன் காரணமாக 2 அடி 5 அங்குலத்தில் இன்னும் காட்சி அளிக்கின்றாள்.
அமுதா என்ற அழகான பெயரைக் கொண்ட இவளுக்கு கருவிலிருந்தே வளர்ச்சி ஓமோன் சுரக்காததால் இந்நிலையென வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
ஓரளவு மெல்லிய குரலுடன் மழலையாக பேசும் இவளை இன்றும். பெற்றோர்கள் தனது தோளில் சுமந்து கொஞ்சி மகிழ்வது பெருமைக்குரிய விடயம்.
ஏனைய சிறுவர்களுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாலும், அமுதாவின் பெற்றோர்களுக்கு தனது முதல் குழந்தை அதுவும் பெண் குழந்தை என்பதால் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருந்தும் அத்தனையும் தனது 28 வயது மழலையின் சிறுபிள்ளைத்தனத்தில் மறந்து வாழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக