தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 24, 2014

இதயம் காக்கும் தக்காளி

அன்றாட சமையலில் பயன்படும் தக்காளி பல விதமான நன்மைகளை கொண்டுள்ளது.
நாம் தினமும் சமையலில் தக்காளியை அதன் பயன் தெரியாமல் பயன்படுத்தி வருகின்றோம். சமையலுக்கு சுவை மட்டுமல்லாமல் நமது உடல் நலம் பாதுகாப்பதிலும் தக்காளி சிறப்பு பங்கு வகிக்கிறது.
சமையல் தவிர பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் தக்காளியை பயன்படுத்துவார்கள். அத்தகைய தக்காளி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
தினமும் தக்காளியை உணவில் பயன்படுத்தி வருவதால் ஏற்படும் நன்மை பற்றி பார்ப்போம்.
இரத்த சோகை
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஒன்றாக சேர்ந்து இருக்கும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
தக்காளிக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. மேலும் இது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சீராக பராமரிக்கும்.
நீரிழிவு நோய்
தக்காளியில் உள்ள வைட்டமின் பி1, சர்க்கரையை எனர்ஜியாக மாற்றக்கூடியவை. எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை எடுத்து வருவது நல்லது.
இதயம் காக்கும்
தக்காளியில் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால், இவை இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, இரத்த நாளங்களை பாதுகாக்கும்.
முகப்பருக்களை தடுக்கும்
தக்காளியில் சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி உள்ளது. எனவே தினமும் இதன் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன், அதனால் ஏற்படும் தழும்புகளையும் தடுக்கலாம்.
கண்களுக்கு சிறந்தது
தக்காளியில் பீட்டா-கரோட்டின் அடங்கியுள்ளதால், இவை பார்வை கோளாறு ஏற்படுவதை தடுத்து, ஆரோக்கியமான பார்வையைக் கொடுக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளியை சேர்த்து வந்தால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம். ஏனெனில் தங்ககாளியில் சோடியம் குறைவாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி புரிகிறது.
கருமையை போக்கும்
வெளியே வெயிலில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் ஒரு தக்காளி துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கும்.
வெட்டுக்காயத்திற்கு மருந்து
கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்பட்டால், அப்போது பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட இடத்தில் வைத்தால், சிறந்த ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.
பற்களை வலுவாக்கும்
தக்காளியிலும் கால்சியம் நிறைந்துள்ளதால், இதனை உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவுடன் இருக்கும்.
உடல் எடை குறைக்க
தக்காளியில் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் சூப் போட்டு ஒரு கப் குடித்து வந்தால், எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment