அசோலா பதேபூர் பெரியின் உடற்பயிற்சியாளரான விஜய் இதுபற்றி கூறுகையில், இங்குள்ள அனைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையும், மாலையும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இந்த பழக்கத்தின் விளைவாக இவர்கள் யாரும் புகை பிடிப்பதோ, மது அருந்துவதோ, புகையிலையோ பயன்படுத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்கள் அனைவரும் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் முக்கிய நோக்கமே பவுன்சர் பணியினை பெற வேண்டும் என்பதே ஆகும்.
காலையும், மாலையும் சேர்த்து தினமும் 3மணி நேரம் பயிற்சி செய்யும் இவர்கள், மோட்டார் சைக்கிளை தூக்குவது, ட்ராக்டர் போன்ற பெரிய வாகனத்தை தூக்குவது போன்றவற்றையும் செய்கின்றனர்.
தினமும் இவர்கள் தங்கள் உணவு பழக்கத்தை திட்டமிட்டு கடைபிடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் விஜயின் மனைவி ரேகா தன்வர் பேசுகையில், எங்கள் கிராம ஆண் பிள்ளைகளை இப்படி பார்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெருமையாகவும் இருக்கிறது.
ஏனெனில், இவர்கள் யாரும் மது, புகையிலை மற்றும் புகை பழக்கங்களை மேற்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக