தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜூன், 2014

கல்லீரல் காக்கும் பாகற்காய்!

உணவாக பயன்படும் பாகற்காய் சிலருக்கு அதன் கசப்பு தன்மை காரணமாகவே பிடிப்பது இல்லை.
கசப்பு தன்மை நிறைந்த பாகற்காய் தான் பல வித மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம்.
காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும்.
சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும்.
பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம்.
வற்றல் போட்டும் சாப்பிடலாம். இதன் கசப்பு தன்மை கொண்டுள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.
இருமல்
நீரிழிவு, ஜூரம், இருமல், மூச்சிரைப்பு, ஆஸ்துமா, மூல நோய், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு ஏற்ற மருந்து பாகற்காய்.
சிரங்கு
பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு அருமருந்தாகும்.
இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.
சர்க்கரை நோய்
1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையும்.
மஞ்சள் காமாலை நோய்
2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையும்.
கல்லீரல் பிரச்சனை
3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.
மூலநோய்
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.
நீரழிவு நோய்
பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
வாயுத்தொல்லை
மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
மாதவிடாய்
பாகற்காய் பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
கண்கட்டி
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக